×

ராயல் என்பீல்டு 350

ராயல் என்பீல்டு நிறுவனம், மேம்படுத்தப்பட்ட என்பீல்டு புல்லட் 350 மோட்டார் சைக்கிளை அடுத்த மாதம் 30ம் தேதி சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார் சைக்கிள், கடந்த 1931ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் 346 சிசி யுசிஇ இன்ஜின் இடம்பெற்றுள்ளது. தற்போது புதிய புல்லட்டில் இடம்பெற உள்ள இன்ஜின், கிளாசிக், மெட்டியோர் மற்றும் ஹண்டர் 350 மோட்டார் சைக்கிள்களில் உள்ள 349 சிசி இன்ஜினாகும்.

இது அதிகபட்சமாக 20 எச்பி பவரையும் 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஒன்றை சீட், வித்தியாசமான டெயில் லாம்ப் இடம்பெற்றிருக்கும். கிளாசிக் மோட்டார் சைக்கிள் ஷோரூம் விலை சுமார் ரூ.1.93 லட்சமாக உள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள மோட்டார் சைக்கிள் சுமார் ரூ.1.5 லட்சத்துக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ராயல் என்பீல்டு 350 appeared first on Dinakaran.

Tags : Royal Enfield ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் களிமண் மற்றும் அட்டையை...